வாஸ்து சாஸ்திரம் நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டிடக் கலை ஆகும். கட்டிடங்களின் தள அமைப்பு, அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் அலசி ஆராய்ந்து வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள பொக்கிஷக் குறிப்புகள் ஆகும்.
ஆதிகாலத்தில் வாஸ்து சாஸ்திரத்தை ‘வாஸ்து வித்யா’ என்று தான் அழைத்து உள்ளனர். அதாவது வரை படங்கள் எதுவும் இல்லாமலேயே திசைகளையும், மனக் கணக்குளை மட்டுமே வைத்து பண்டைய காலங்களில் மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் சந்தைகள், பொது இடங்களை வாஸ்து சாஸ்திர முறைப்படி வடிவமைத்து வாழ்ந்து உள்ளனர்.

